மனதோடு மழை வாசம்! அத்தியாயம் - 2
மனதோடு மழை வாசம்! அத்தியாயம் - 2 ஏதோ சண்டை போல உள்ளதே என்று வர்ஷா எண்ணினாள். எதற்கும் சென்று பார்ப்போம் என்று அங்கு சென்றாள். அங்கு கூட்டத்தின் நடுவில் நின்றவர்களைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். யாரைத் தன வாழ் நாள் முழுவதும் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலோ அவர்களை அங்கு கண்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ பிரச்சனைப் போல என்று எண்ணி அவ்விடத்தை விட்டு நகர முற்பட்டாள். மணிக்கும் அவர்களைக் கண்டது அதிர்ச்சியே! அவள் நகர முற்பட்ட நொடியில் அங்கு இருந்த பெண்மணி ஒருவர் பாய்ந்து சென்று அவளைத் தடுத்து நிறுத்தினார். "என்னம்மா மகராணி! இதற்கு எல்லாம் நீ தான் காரணமா? எத்தனை நாட்களைத் திட்டம் போட்டு இருந்தாய்! இப்படி செய்ய! ஐயோ! கடவுளே! நீ நல்லா இருப்பியா? எங்கள் பொண்ணை என்ன செய்தாய்? எங்கே எங்கள் பெண்?" என்று சத்தமிட்டு அழத் தொடங்கினாள். அவளது அருகே வந்த அவளது கணவர் மாதவன், "அம்பிகா! அழாதே மா! உனக்கு உடம்பு சரி இல்லை ஏற்கனவே. இப்போது இந்த கலாட்டா வேறே. அழுகாதே மா" என்றார். வர்ஷவோ இங்கு நடப்பது என்ன? அபிராமி தன்னை ஏன் குற்றம் சாட்டுகிறார்? என்ற...