மனதோடு மழை வாசம்! அத்தியாயம் - 2

மனதோடு மழை வாசம்! 

 அத்தியாயம் - 2


ஏதோ சண்டை போல உள்ளதே என்று வர்ஷா எண்ணினாள். எதற்கும் சென்று பார்ப்போம் என்று அங்கு சென்றாள். அங்கு கூட்டத்தின் நடுவில் நின்றவர்களைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்.

யாரைத் தன வாழ் நாள் முழுவதும் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலோ அவர்களை அங்கு கண்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ பிரச்சனைப் போல என்று எண்ணி அவ்விடத்தை விட்டு நகர முற்பட்டாள்.

மணிக்கும் அவர்களைக் கண்டது அதிர்ச்சியே!

அவள் நகர முற்பட்ட நொடியில் அங்கு இருந்த பெண்மணி ஒருவர் பாய்ந்து சென்று அவளைத் தடுத்து நிறுத்தினார்.

"என்னம்மா மகராணி! இதற்கு எல்லாம் நீ தான் காரணமா? எத்தனை நாட்களைத் திட்டம் போட்டு இருந்தாய்! இப்படி செய்ய! ஐயோ! கடவுளே! நீ நல்லா இருப்பியா? எங்கள் பொண்ணை என்ன செய்தாய்? எங்கே எங்கள் பெண்?" என்று சத்தமிட்டு அழத் தொடங்கினாள்.

அவளது அருகே வந்த அவளது கணவர் மாதவன், "அம்பிகா! அழாதே மா! உனக்கு உடம்பு சரி இல்லை ஏற்கனவே. இப்போது இந்த கலாட்டா வேறே. அழுகாதே மா" என்றார்.

வர்ஷவோ இங்கு நடப்பது என்ன? அபிராமி தன்னை ஏன் குற்றம் சாட்டுகிறார்? என்று குழம்பி இருந்தவள் மாதவன் அவளை சமாதானப்படுத்தவும் அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மணியோ நடப்பது என்னவென்று புரியாமல் குழம்பினார்!

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த நெடியவன் வர்ஷாவுக்கு அருகில் வந்தான்.

அவள் அருகில் நின்றவன் அபிராமியைப் பார்த்தான், "என்ன டிராமா இதெல்லாம்?" என்று கர்ஜித்தான்.

உடனே அபிராமி, "தம்பி, இவள் தான் என் மகளை எதோ செய்து விட்டாள். இந்த கல்யாணத்தை நிறுத்த இவள் போடும் நாடகம் இதெல்லாம்" என்று கூறியவள், வர்ஷாவை நோக்கி, "பணத்துக்காக என் மகள் வாழ்வில் மண்ணள்ளிப் போட்டுவிட்டாயே! பாவி. நீ பணக்காரியாக வாழ முடியாமல் என் மகள் வாழ்வதையும் பார்க்க பொறுக்காமல் இப்படி செய்து விட்டாயே! எங்கேடி எங்கள் மகள்? என்ன செய்தாய் அவளை?" என்று கூறிக் கொண்டே வர்ஷாவை உலுக்கினாள்.

வர்ஷா குழம்பி என்ன நடந்திருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தாள். அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நெடியவனுக்கோ கோபம் எல்லை மீறியது. அவனைப் பொறுத்தவரையில் இவள்தான் எதோ செய்துவிட்டாள் என்று எண்ணினான்.

அவனது முகத்தில் படிந்த கோபத்தைப் பார்த்த அபிராமி அதனை மேலும் தூண்டி விட்டார்.



மாதவனை நோக்கி, "இவள் வயிற்றேரிச்சல் பிடித்தவள். நம் மகள் வாழ்வை அழிக்கப்பார்க்கிறாள். காவ்யா! எங்கே அம்மா போனாய்! பணத்துக்காக இப்படி ஒரு பெண் கடத்தும் அளவுக்கு போவாளா?" என்று ஓங்கி அழ ஆரம்பித்தார்.

இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த நெடியவனுக்கோ கோபம் தலைக்கு ஏறியது. அதனைப் பார்த்த அபிராமி, "இந்த கல்யாணம் இப்போது நின்று போச்சே! தம்பி எவ்ளோ பெரிய ஆள். இனி எப்படி எல்லார் முகத்திலும் விழிக்கும். கடவுளே! " என்று எரிகிற தீயில் எண்ணையை ஊற்றினார்.

வர்ஷாவுக்கோ பணத்திற்காக நான் இப்படி பண்ணினேனாம்! கடவுளே கடவுளே! என்று மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டாள். அதுசமயம் மணியின் செல் அடித்தது. அவர் அதனைப் பார்த்து சைலென்ட் மோடில் போட்டார். அதனைப் பார்த்த வர்ஷாவுக்கு அது யாருடைய அழைப்பு என்று சொல்லாமலே புரிந்தது.


வர்ஷா அமைதியாக திரும்பி, "உங்களுடைய டிராமவைப் பார்க்க எனக்கு நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை." என்று கூறியவள், மணியை நோக்கி, "அங்கிள் போலாமா?" என்று கேட்டாள்.

மாதவன் உடனே, "அடிப்பாவி, என் மகள் வாழ்க்கையை அழித்துவிட்டு பார்த்து சந்தோசித்துவிட்டு போறியா? என் செல்ல மகள் எங்கு என்ன பாடுபடுகிறாளோ? உனக்கு சொத்து வேண்டும் என்றால் என்னை அல்லவா கேட்க வேண்டும். ஏதோ போனால் போகுது என்று என்னிடம் வேலை செய்பவன் எவனையாவது பார்த்து உனக்கு திருமணம் செய்து எதாவது பிச்சையாக போட்டிருப்பேனே! இப்பொழுது என் சொத்து முழுவதும் தருகிறேன். என் மகள் காவ்யாவைத் தந்துவிடு!" என்று அழ ஆரம்பித்தார்.

வர்ஷாவுக்கும் மணிக்கும் கேட்டதும் கோபம் கட்டுக்கடங்காமல் சென்றது. மணி, "மாதவன்!" என்று கோபத்தில் குரலெழுப்ப, வர்ஷா அவரைப் பார்வையாலே அடக்கினாள்.

மாதவனை நோக்கி," சோ, நான் தான் உங்கள் சொத்துக்கு ஆசை பட்டு, உங்கள் மகளைக் கடத்தினேன் இல்லையா? நல்லது! அப்படியே இருக்கட்டும். நீங்கள் என் மீது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்துவிடுங்கள். நான் அங்கு பேசிக்கொள்கின்றேன். உங்களுடன் பேச நான் விரும்பவில்லை." என்றவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

அவளது கரம் பற்றி தடுத்த அந்த நெடியவன், அவனது கரத்தில் இருந்த மாங்கல்யம் கோர்க்கப்பட்ட செயினை அவள் கழுத்தில் சற்றும் தாமதிக்காது போட்டான்.

அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

"நீ நிறுத்த முயற்சி செய்தது, காவ்யாவின் கல்யாணம் மட்டுமில்லை. என்னதும் தான். அதுக்கு உனக்கு தண்டனை, நீ காலம் முழுவதும் Mrs. ஆதித்தியன் தான்." என்றவன் விடுவிடுவென்று அவளை இழுத்துக்கொண்டு சென்றான்.

-- வாசம் வீசும்.



©opy Right to Shrijo
ம்
ம்

Comments