Posts

Showing posts from March, 2016

மனதோடு மழை வாசம்! அத்தியாயம் - 2

மனதோடு மழை வாசம்!   அத்தியாயம் - 2 ஏதோ சண்டை போல உள்ளதே என்று வர்ஷா எண்ணினாள். எதற்கும் சென்று பார்ப்போம் என்று அங்கு சென்றாள். அங்கு கூட்டத்தின் நடுவில் நின்றவர்களைப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். யாரைத் தன வாழ் நாள் முழுவதும் பார்க்கக் கூடாது என்று நினைத்தாலோ அவர்களை அங்கு கண்டது அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏதோ பிரச்சனைப் போல என்று எண்ணி அவ்விடத்தை விட்டு நகர முற்பட்டாள். மணிக்கும் அவர்களைக் கண்டது அதிர்ச்சியே! அவள் நகர முற்பட்ட நொடியில் அங்கு இருந்த பெண்மணி ஒருவர் பாய்ந்து சென்று அவளைத் தடுத்து நிறுத்தினார். "என்னம்மா மகராணி! இதற்கு எல்லாம் நீ தான் காரணமா? எத்தனை நாட்களைத் திட்டம் போட்டு இருந்தாய்! இப்படி செய்ய! ஐயோ! கடவுளே! நீ நல்லா இருப்பியா? எங்கள் பொண்ணை என்ன செய்தாய்? எங்கே எங்கள் பெண்?" என்று சத்தமிட்டு அழத் தொடங்கினாள். அவளது அருகே வந்த அவளது கணவர் மாதவன், "அம்பிகா! அழாதே மா! உனக்கு உடம்பு சரி இல்லை ஏற்கனவே. இப்போது இந்த கலாட்டா வேறே. அழுகாதே மா" என்றார். வர்ஷவோ இங்கு நடப்பது என்ன? அபிராமி தன்னை ஏன் குற்றம் சாட்டுகிறார்? என்ற...

மனதோடு மழை வாசம்! --- ஸ்ரீஜோ

Image
மனதோடு மழை வாசம் ! ---   ஸ்ரீஜோ அத்தியாயம் – 1 அந்த அதிகாலை வேளையில் சேலத்தில் இருந்து திருச்செங்கோட்டிற்க்கு அந்த நீல நிற ஆடி கார்   புறப்பட்டது ! நம் கதையின் நாயகி வர்ஷா பின் சீட்டில் அமைதியாக அமர்ந்து அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி தன்னுடைய மடிக்கணினியில் குறித்துக் கொண்டிருந்தாள் . செம்மண் நிற சில்க் காட்டன் புடவை அவளுடைய பால் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது . மெல்லிய செயின் , சாதாரண ஜிமிக்கி தோடுகள் , மெல்லிய தங்க வளையல்கள் இரண்டு ஒரு கையில் , மற்றொன்றில் ஒரு மெல்லிய கைச்சங்கிலி , நீல விரல்களுக்கு ஒத்த மோதிரங்கள் , மெல்லிய வெள்ளி கொலுசு என அவளது தோற்றம் அவளை ஒரு நடுத்தர வர்க்க பெண்ணாகவே காட்டியது . அவளை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய பர்சனல் செக்கரட்டரி மணி அவளிடம் எதுவோ சொல்ல வருவது அவருடைய பார்வையில் தெரிந்தது ! அவளைத் தொந்தரவு செய்தால் அவளுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதும் அவர் அனுபத்தில் ஒன்று ! எனவே அமைதியாக வந்தார் . அவர்...