மனதோடு மழை வாசம்! --- ஸ்ரீஜோ
மனதோடு மழை வாசம்! ---
ஸ்ரீஜோ
அத்தியாயம் – 1
அந்த அதிகாலை வேளையில் சேலத்தில் இருந்து திருச்செங்கோட்டிற்க்கு அந்த நீல நிற ஆடி கார் புறப்பட்டது!
நம் கதையின் நாயகி வர்ஷா பின் சீட்டில் அமைதியாக அமர்ந்து அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றி தன்னுடைய மடிக்கணினியில் குறித்துக் கொண்டிருந்தாள்.
செம்மண் நிற சில்க் காட்டன் புடவை அவளுடைய பால் நிறத்திற்கு எடுப்பாக இருந்தது. மெல்லிய செயின்,சாதாரண ஜிமிக்கி தோடுகள், மெல்லிய தங்க வளையல்கள் இரண்டு ஒரு கையில், மற்றொன்றில் ஒரு மெல்லிய கைச்சங்கிலி, நீல விரல்களுக்கு ஒத்த மோதிரங்கள், மெல்லிய வெள்ளி கொலுசு என அவளது தோற்றம் அவளை ஒரு நடுத்தர வர்க்க பெண்ணாகவே காட்டியது.
அவளை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய பர்சனல் செக்கரட்டரி மணி அவளிடம் எதுவோ சொல்ல வருவது அவருடைய பார்வையில் தெரிந்தது! அவளைத் தொந்தரவு செய்தால் அவளுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதும் அவர் அனுபத்தில் ஒன்று! எனவே அமைதியாக வந்தார்.
அவளை அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய பர்சனல் செக்கரட்டரி மணி அவளிடம் எதுவோ சொல்ல வருவது அவருடைய பார்வையில் தெரிந்தது! அவளைத் தொந்தரவு செய்தால் அவளுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்பதும் அவர் அனுபத்தில் ஒன்று! எனவே அமைதியாக வந்தார்.
அவர் திரும்பி திரும்பி பார்ப்பதை பார்த்தும் தன் வேலையை முடிக்கும் வரையில் அவள் அவரைப் பார்க்கவில்லை.
சிறிது நேர மவுனத்திற்குப் பின், வர்ஷா மணியிடம் "என்ன அங்கிள்? எதாவது முக்கியமான விஷயமா?" என்று கேட்டாள்.
"ஆமாம் மா. இன்று திருசெங்கோட்டில் நிலப்பதிவு முடித்து நாம் உடனடியாக சேலம் திரும்ப வேண்டும். நமது ஆடிட்டர் நாளை முக்கிய வேலையாக சென்னை செல்வதால் இன்றே உன்னை சந்திக்க வேண்டி உள்ளது."
"அப்படியா அங்கிள்! சரி அவருக்கு இன்று மாலை என்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் பட்டியலைப் பார்த்து ஒதுக்கிவிடுங்கள்"
"சரிமா. இப்போது நாம் மலைக் கோவிலுக்குப் போனால் பூஜை முடித்து கீழே வர சரியாக இருக்கும்."
"சரி அங்கிள். பாலன்(டிரைவர்) பூஜைக்கு உரிய பொருட்கள் எல்லாம் தயாரா?"
பாலன்," எடுத்து வைத்து விட்டேன் மேடம். எதுவும் வாங்க வேண்டியது இல்லை!"
வர்ஷா, "சரி."
சில நிமிடங்களில் வர்ஷாவுக்கு செல்லில் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது!
கார் ஒருவழியாக மலை அடிவாரத்தை நோக்கி சென்றது. கார்த்திகை மாதம் என்பதாலும். மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதாலும் கூட்டம் அலைமோதியது.
உமையொரு பாகன் அந்த அதிகாலை வேளையிலும் அனைவருக்கும் சிறப்பாக அருள்பாலித்துக்கொண்டு இருந்தார். அவர்களது வாகனம் மலைப்பாதையில் மெதுவாக ஏற ஆரம்பித்தது.
வாகனத்தை நிறுத்தி விட்டு, பாலன், மணி மற்றும் வர்ஷா கோவில் பிரகாரத்தினுள் நுழைந்தனர்.
முன்கூட்டியே சிறப்பு பதிவு செய்திருந்தபடியால், சிறப்பு தரிசனம் செய்வதில் தாமதம் ஏற்படவில்லை.
தரிசனம் முடிந்து சற்று நேரம் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்க்க அரம்பித்தனர்.
மணியோ மனதில், "இந்த பெண் எப்பொழுதும் புரியாத புதிர். எவ்வளவு நகைகள் உள்ளது. நம் பெண்கள் அணியும் நகை அளவைக் கூட இவள் அணிவதில்லை. இந்த சிறு வயதில் எத்தனை திறமை?" என்று எண்ணிக்கொண்டு இருந்தார்.
அவர்கள் புறப்படத் தயாராகும் போது அங்கே ஒரு கல்யாண மேடையில் சத்தம் கேட்டது.
வர்ஷா தன்னையும் அறியாமல் அங்கே சென்றாள். மற்ற இருவரும் அவளைப் பின் தொடர்ந்தனர்.
கூட்டத்தில் நடு நாயகமாக நின்றவர்களைப் பார்த்து அதிர்ந்தாள்.
-- வாசம் வீசும்.
@ ©opy Right to Shrijo

http://ladyswings.com/community/forum.php
ReplyDeleteஉங்கள் கதை அருமையாக உள்ளது .. எங்கள் தளத்திலும் பதிவிடுங்கள் .. நாங்களும் படித்து மகிழ்வோம் ..
ReplyDelete